துபாய்: ஐடிஎஃப் டென்னிஸ் தொடரின் பெண்கள் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அன்கிதா ரெய்னா – ஜார்ஜியாவின் எக்டரினா ஜோடி, சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டின் அலியோனா மற்றும் ஸ்லோவேனியாவின் ஜுவன் ஜோடியை எதிர்கொண்டது அன்கிதா ரெய்னா ஜோடி.

முதல் செட்டில், அன்கிதா இணை, 6-4 என்ற கணக்கில் வென்றாலும், இரண்டாவது செட் 3-6 என்ற கணக்கில் கையை விட்டுப்போனது. எனவே, வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்று சூப்பர் டை பிரேக்கர் வரை சென்றது.

இந்த செட்டில், அன்கிதா ரெய்னா இணை, 10-6 என்ற கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மொத்தத்தில், 6-4, 3-6 மற்றும் 10-6 என்ற கணக்கில் போட்டியை வென்றது அன்கிதா ரெய்னா இணை.

 

[youtube-feed feed=1]