கொழும்பு:
இலங்கை காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா கூடுதலாக ரூ.286 கோடி உதவி அளித்துள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 45 ஆயிரம் வீடுகள் கட்டித்தந்தது இந்திய அரசு. மேலும் வடமாகாணப் பகுதிகளில் இந்திய அரசு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
‘யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், காங்கேசன் துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய அரசு உதவிகளை வழங்கி உள்ளது.
இந்த நிலையில் ங்கேசன் துறைமுக மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.286 கோடி கூடுதல் நிதியுதவி அளிக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-இலங்கை இடையே இன்று கையெழுத்தானது.