மாஸ்கோ: உலகளவிலான திறன் அறியும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார். இந்தப் போட்டி ரஷ்யாவில் நடந்தது.
ரஷ்யாவின் காஸன் நகரில் உலகளாவிய திறன் அறிதல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மொத்தம் 63 நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். இப்பட்டியலில் இந்தியாவும் அடக்கம்.
தண்ணீர் தொழில்நுட்பத்தில் தனது திறமையை நிரூபித்ததற்காக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வத் நாராயணனுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.
இவரைத்தவிர, வெப் தொழில்நுட்பத்தில் பிரனவ் நுத்தலபதி வெள்ளியும், தங்க நகை ஆபரண தொழில்நுட்பத்தில் சஞ்சய் பிரம்னிக் மற்றும் கிராஃபிக் டிசைனிங் தொழில்நுட்பத்தில் ஸ்வேதா ரத்தன்புரா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களும் வென்று அசத்தினர்.