இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்தில் மூன்று இளம்பெண்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு இனக்கலவரம் மூண்டுள்ளது.
வெள்ளை இன பெண்கள் மீதான இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு சிறுபான்மை இனத்தவர்களே காரணம் என்று கூறிவரும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் வன்முறை நிகழ்வதை அடுத்து இந்தியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தை அங்குள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.