வாஷிங்டன்
வரும் 2020ல் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 450 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கா செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க கீரின் கார்டு பெற வேண்டும். கிரீன் கார்டு என்பது அமெரிக்கக் குடியுரிமை ஆகும். வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதால் அமெரிக்க அரசு கிரீன் கார்டு அளிப்பதை வெகுவாக குறைத்துள்ளது. மேலும் இதற்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமானோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இது குறித்து அமெரிக்காவின் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் மைக் லீ, ”அமெரிக்கக் குடியுரிமை பெற மக்கள் வருடக் க்ணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. எச்1பி1 விசா பெற்று இங்கு பணியில் அமர்வோர் அனைவரும் மற்றும் குடும்பத்தினரும் குடியுரிமை பெற விண்ணப்பிக்கின்றனர். தற்போது குடியுரிமை அளிக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் காத்திருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு விண்ணப்பித்தோர்களில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே அவர்கள் மற்றவர்களை விட நீண்டநாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது தற்போதைய அதாவது 2020 ஆம் ஆண்டு நிலைமையின் படி இந்தியர்கள் 20 முதல் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதே அளவில் வருடா வருடம் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்னும் 10 வருடம் கழித்து அதாவது 2030 ஆம் வருடம் இவ்வாறு காத்திருப்போர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என சொல்ல முடியுமா? 40? 50?அல்லது 60? எதுவும் இல்லை.195 வருடம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது கிரீன் அட்டைகள் வழங்கல் மேலும் குறைக்கப்பட உள்ளன. இதைக் கணக்கிடும் பொது குறைந்தது இந்தியர்கள் 450 வருடம் காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.