ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதே போல ஆஸ்திரேலியா, கனடா உட்படப வெளிநாடுகிளிலும் போராட்டங்களை தமிழர்கள் நடத்தி வருகிறார்கள்.
இதே போல அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில், பிற மொழி பேசும் இந்தியர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். நேற்று அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள், ‘ஏறு தழுவ தடை தமிழா அதை உடை’ என்ற முழக்கத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில்தான் பிற மொழி பேசும் இந்தியர்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘ஏறு தழுவ தடை தமிழா அதை உடை’ என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியிருந்தனர். பெரும்பாலோர் வெள்ளை நிற சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருக்கும் பீட்டா அமைப்பின் மண் என கருதப்படும் அமெரிக்காவிலேயே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.