கபாலி குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்து வரும் வேளையில், மலேசிய துணை முதலமைச்சரும் கபாலி குறித்து விமர்சிக்கத் தவறவில்லை.
பெனாங்கு துணை முதல்வர்- பி. ராமசாமி, ரஜினி காந்த் நடித்த கபாலி படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து ஒரு பத்திரிக்கையில் நீண்ட கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.
அதன் சாரம்சம்:
கபாலி ஒரு மிகைப்படுத்தப்பட்ட திரைபடம்.
ரஜினிகாந்த் மட்டும் நடிக்காமலோ, பல கோடி முதலீடோ செய்யப்படாதிருந்தால் இந்தப்படம் ஒரு சாதாரணப் படமாக இருந்திருக்கும்.
கபாலியைப் பார்த்துத் தான் மலேசியர்கள் தங்களின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
மலேசியர்களின் எதிரியை இனம்காண கபாலியைப் பார்த்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனும் அவசியமில்லை.
மக்களின் மேம்பாட்டை தடுப்பது எது என்று அறிய வேண்டுமானால் இந்தப் படம் பயன்படலாம்.
மலேசிய மக்கள் அரசியல் எழுச்சியைப் பெற வேண்டுமே தவிர கபாலியைக் கொண்டாடக் கூடாது.
திரையில் வேண்டுமானால் ரஜினி சூப்பர் ஸ்டாராய் இருக்கலாம், நிஜத்தில் அவர் மக்களுக்கு எந்த நன்மையும் செய்துவிடவில்லை.
வர்த்தகரீதியில் லாபமீட்டவும், பணம் சம்பாரிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட திரைப்படம் கபாலி.
எதிர்கட்சியினர் தேவையின்றி கபாலி படத்தைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் மக்களின் துயர் போக்கும் நடவடிக்கையில் இத்தனை ஆண்டுகள் ஈடுபடாமல் இருந்ததால் தான் மக்கள் துன்புறுவது தொடர்கின்றது என்பதை அறியாதிருக்கின்றனர்.
கபாலி போன்று மலேசிய மக்களின் துயரை வெளிப்படுத்தும் நூறு படங்கள் வெளிவந்தாலும் மக்களின் துயர் தீர்ந்துவிடாது.
மக்கள் அரசியல் மறுமலர்ச்சியத்தான் விரும்ப வேண்டுமே தவிர இது போன்ற சினிமாக்களை அல்ல.
எனவே ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வேலையைச் செய்ய வேண்டாம். சினிமாவை வெறும் பொழுதுப் போக்குக்கு மட்டும் பார்த்தால் போதும். அதன் உள் அர்த்தங்கள் என்னவென்று ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
பெனாங்கு துணை முதல்வர்- பி. ராமசாமி
நன்றி: ஃப்ரீமலேசியாடுடே