வாஷிங்டன்
இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கிரீன் கார்டு கிடைத்தால் அமெரிக்கக் குடிமகன் அல்லாதோர் அங்கு நிரந்தரமாக வசிக்க மற்றும் பணி புரிய முடியும். எனவே அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு பெறுவது என்பது அவர்கள் ஆசைகளில் ஒன்றாகும். அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் ஒவ்வொரு நாட்டினருக்கும் 7% சதவிகிதம் என்னும் அடிப்படையில் இந்த கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.
எனவே எச்1பி வேலை விசாவின் மூலம் சென்ற பலரும் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஐடி பணி புரியும் இந்தியர்களும் ஏராளமானோர் உள்ளனர். தற்போது இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சட்டப்படி கிரீன் கார்ட் பெற முடியும்.
தற்போதுள்ள நிலையில் ஒவ்வொரு நாட்டினருக்கும் 7% பேருக்கு கிரீன் கார்டு அளிக்கப்படும் என்னும் உத்தரவு உள்ளதால் இந்தியர்கள் கிரீன் கார்ட் பெறக் குறைந்தது வரும் 2030 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என ஒரு அறிவிப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ளவர்களுக்கு கிரீன் கார்ட் அளித்த பிறகே தர முடியும் என்பதால் விண்ணப்பித்தோருக்கு உடனடியாக கிரின் கிடைக்காது என அந்த அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது.