பாரிஸ்
பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிம் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது.
நேற்று ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அபார வெற்றிபெற்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் வினேஷ் போகத் முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இன்று இப்போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.