வளைகுடா நாட்டில் இந்திய பெண் சித்திரவதை

ருபீனா ஃபாத்திமா

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்  ருபீனா ஃபாத்திமா. வயது 36.  இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன், துபாயில் வேலை கிடைத்தது.  ஆனால் துபாய்க்கு சென்ற அப்பெண், ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்டு ஓமனிற்கு கடத்தப்பட்டார். அங்கு ருபீனா கடுமையான சித்தரவதைக்கு ஆளானார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ருபீனாவின் கணவர் குலாம் ஐதர் பேசினார். அப்போது அவர், கடந்த இரண்டாம் தேதி தொலைபேசியில் பேசிய தனது மனைவி அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி  கதறி அழுததாக தெரிவித்தார். பெல்ட்டால் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தெலங்கானா அரசு, சிஐடி மூலம் ருபீனா வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.


English Summary
Indian woman tortured in the Gulf