குவாங்ஜூ
இந்திய மகளிர் அணி வில்வித்தை உலகப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
உலகக்கோப்பை வில்வித்தை போட்டி தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடந்தது. இதில் ரிதி போர், கோமாலிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கலந்து கொண்டது.
சீன தைபே அணியை எதிர்த்து இந்தப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி உள்ளது. இதையொட்டி இந்திய மகளிர் அணிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
இது குறித்து கோமலிகா பாரி, “வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் தென் கொரியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. மூலம் சீன தைபேவுக்கு எதிராகத் தொடக்கத்திலேயே முன்னிலை பெற முடிவு செய்திருந்தோம். தற்போது அதன்படியே போட்டியும் அமைந்து வெற்றி பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.