அபுதாபி:
குவைத்தில் பணிபுரிந்து வரும் அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு அபுதாபி லாட்டரி குலுக்கலில் சுமார் 12.7 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. “50 வயதான அனில் வர்கிஸ் குவைத்தில் கம்பெனி ஒன்றில் நிர்வாக உதவியாளராக இருக்கிறார்” என்று கூறப்படுகிறது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது மகன் கேரளாவில் கல்லூரி படித்து வருகிறான்.
இந்நிலையில் அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டுக்கான எண்ணை ஆன்லைன் மூலம் தேர்வு செய்திருந்தார். அந்த எண், தனது மகனின் பிறந்தநாளை கணக்கிட்டு வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணுக்குத்தான் ஜாக்பாட் கிடைத்துள்ளது. பரிசுத்தொகையா 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 12 கோடி ரூபாய்) கிடைத்துள்ளது. இதுதவிர மேலும் 5 இந்தியர்கள் உள்பட 7 பேருக்கு பரிசு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வர்கீஸ் கூறியதாவது, அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை ஆன்லைனில் தேர்வு செய்யும்போது எனது மகனின் பிறந்த நாளான 11/97 ஒத்து போவது போல் வாங்கினேன் என்றும், பிக் டிக்கெட் மூலம் எனது அதிர்ஷ்டத்தை சோதிப்பது இது இரண்டாவது முறை. நான் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையை இன்னும் நம்ப முடியவில்லை. சமீபத்தில் எனக்கு பல பிரச்சனைகள் வந்தது. அது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பணத்தைவைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து இனிமேல்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.