மாலே
மாலத்தீவில் இந்திய சுற்றுலா ப்யணிகள் வருகை மிகவும் குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றபின் இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எனவே அந்த நாட்டுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது.
இந்த ஆண்டின் 2 ஆவது காலாண்டில் வெறும் 28,604 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலாண்டில் 54,207 இந்தியர்கள் மாலத்தீவு சென்றிருந்தனர்
ஆகவே சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலத்தீவு கவனம் செலுத்துகிறது. அங்குள்ள 4 பெரிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
அடுத்த மாதம் (ஜனவரி) முதல் பீஜிங், ஷாங்காய், செங்டு மற்றும் ஜியான் நகரங்களுக்கு பெரிய விமானங்களை இயக்க மாலத்தீவு முடிவு செய்துள்ளதாக மாலத்தீவு விமானப்போக்குவரத்து மந்திரி முகமது அமீன் அறிவித்துள்ளார்.