இந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்

Must read

சிட்னி: இந்திய அணியின் போராட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், எதற்காக இத்தனை காயங்கள் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி விடை கண்டாக வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியினர் காயமடைவது வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. எதற்காக இந்த நிலை என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

அதேசமயம், அவர்களின் போராட்டத்திறன் குறித்து எந்த சந்தேகமும் எழுப்ப முடியாது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களால் சிலருக்கு காயமேற்பட்டிருக்கலாம். ஆனால், அதை தவிர்த்த பல விஷயங்கள், இந்திய அணியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து வருகின்றன.

உலகின் பல சிறந்த அணிகள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடி தோல்விகளை சந்தித்துள்ளார்கள். ஆனால், தற்போதைய இந்திய அணியின் செயல்பாடு மிகப் பிரமாதமாக உள்ளது” என்றுள்ளார் கில்கிறிஸ்ட்.

 

More articles

Latest article