துபாய்: ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. ஆனால், இந்திய அணியுடன் ரோகித் ஷர்மா செல்லவில்லை.

ஆஸ்திரேலியாவில் டி-20 தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது இந்திய அணி.

மொத்தம் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அதேசமயம், கேப்டன் விராத் கோலி முதல் போட்டியில் மட்டுமே ஆடுகிறார். தனது மனைவி அனுஷ்காவிற்கு தலைப் பிரசவம் காரணமாக அவர் நாடு திரும்புகிறார்.

இதன் காரணமாக, டெஸ்ட் தொடரில் ரோகித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், இவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள ரோகித், ஒருநாள் & டி20 தொடரில் இடம்பெறவில்லை.