அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரி உயர்வை அடுத்து உலகளவில் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பங்குகளும் வார இறுதிநாளான வெள்ளியன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

இதையடுத்து பங்குச் சந்தையின் முதல்நாளான இன்று சென்செக்ஸ் 3,000 புள்ளிகளும், நிஃப்டி 1,000 புள்ளிகளும் சரிவை சந்தித்தது. ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.

வரி விதிப்பு தவிர நிர்வாக முடிவுகளில் அமெரிக்க அதிபரின் நிச்சயமற்ற தன்மை தொடர்வதை அடுத்து இந்த வீழ்ச்சி நீடித்து வருகிறது.

அதேவேளையில் டிரம்ப் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எந்த ஒரு துப்பும் இல்லாததை அடுத்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் தவித்து வருகின்றனர்.

டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.