வேல்ஸ்
துபாய் மன்னர் தனது மகளைக் கோவாவில் இருந்து கடத்த இந்திய சிறப்புப்படை உதவியதாகப் பிரிட்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் மனைவி ஹயா பிந்த் அலி ஹுசைன் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் சகோதரி ஆவார். இவருக்கு ஜலிலா மற்றும் சயீத் எனும் 7 வயது மகள்களும் உள்ளனர். இவருக்கும் இவரது பிரிட்டிஷ் மெய்க்காப்பாளருக்கும் தகாத உறவு உள்ளதாக வதந்திகள் பரவின. இதனால் பயந்து போன ஹயா லண்டனுக்குத் தப்பி ஓடினார்.
இதையொட்டி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு ப்தியப்பட்டது. இந்த வழக்கு வேல்ஸில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் ஏற்கனவே துயாய் மன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் வீதிகளில் அவருடைய 18 வயது மகள் ஷம்சாவை கடத்தி துபாய்க்குக் கொண்டு சென்றதாக ஹயா தெரிவித்தார். அத்துடன் துபாய் மன்னரின் மற்றொரு மகள் லதீபாவை கோவாவில் இருந்து கடத்திச் சென்றதையும் தெரிவித்தார்.
இதனால் தனக்கும் தன் குழந்தைகளுக்குத் துபாய் மன்னரால் ஆபத்து இருப்பதாக ஹயா தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட பிரிட்டன் நீதிமன்றம் துபாய் மன்னர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த் தீர்ப்பில் துபாய் மன்னர் தனது மகள் லதீபாவை கோவாவில் இருந்து இந்திய சிறப்புப் படை உதவியுடன் கடத்திச் சென்று துபாய்க்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் அளிக்கப்படாமல் குடும்ப நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே துபாய் மன்னருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிற்து.