மும்பை
இந்தியப் பங்குச் சந்தை யெஸ் வங்கி விவகாரம் காரணமாகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
உலக பங்குச் சந்தையில் பல முன்னணி சர்வதேச நிறுவனப் பங்குகள் கடந்த வாரம் கொரோனா வைரஸ் காரணமாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக எஸ் அண்ட் பி பங்குகள் விலையில் கடும் சரிவு உண்டாகியது. ஆயினும் இந்தியப் பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சியின் தாக்கம் அதிக அளவில் இல்லை எனக் கூறலாம்.
கடந்த வார இறுதியில் யெஸ் வங்கியின் நிதி நிலை கடுமையாக பாதிப்பு அடைந்து அந்த வங்கியின் நிர்வாகம் பொறுப்பை ரிச்ர்வ் வங்கி ஏற்றுக் கொண்டது. அதை ஒட்டி யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு வாடிக்கையாளர் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை ரூ50000 மட்டுமே கணக்கில் இருந்து எடுக்க முடியும் என அறிவித்தது.
இதனால் யெஸ் வங்கியில் டிமேட் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தாக்கம் இன்றைய பங்குச் சந்தையில் நன்கு எதிரொலித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டதை விட தற்போது உள்நாட்டுப் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது/
பங்குகள் விலையில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் வீழ்ச்சி யை இன்றைய பங்குச் சந்தை சந்தித்துள்ளது. இன்று சென்செக்ஸ் புள்ளிகள் 1900 சரிந்து காணப்பட்டுள்ளது. கட்னத 2010க்கு பிறகு ஒரே நாளில் பங்குச் சந்தை இவ்வளவு வீழ்ச்சியைக் கண்டதில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.