டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று 2வது நாளாக வீழ்ச்சி தொடர்கிறது. இன்று ரூ.81.18 ஆக உள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரும் வீழ்ச்சி என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டு வரும் நிலையில், 2வது நாளாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இது 3வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுபடுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நிய செலவாணி வர்த்தகம் மிக மந்தாக நடைபெற்று வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93 காசு சரிந்து 80.89 என்ற அளவில் சரிந்தது.
இந்தியாவிலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சியை சந்தித்து ரூ.81.18 ஆக ஆகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் இது மிகப்பெரும் வீழ்ச்சி என கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை பாதித்துள்ளன. கடந்த அமர்வின் உச்சட்தினை உடைக்கும்பட்சத்தில் மேற்கோண்டு வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.