இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் அதிகரித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இன்று காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 24 பைசா சரிந்து ஒரு டாலரின் மதிப்பு ₹85.93 ஆக இருந்தது.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில் வரி விவகாரத்தில் இந்திய அரசின் கொள்கை நிச்சயமற்றதாக உள்ளது.
தவிர, நாட்டின் பங்குச் சந்தை குறியீடுகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து மூலதனத்தை திரும்பப் பெறுவதும் இந்த சரிவுக்கு காரணமாக் கூறப்படுகிறது.
மேலும், மாத இறுதி என்பதால் இறக்குமதியாளர்கள் பணம் செலுத்த டாலர்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாணய மாற்று சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.