சென்னை: ரயில் பயணத்தின்போது, சக பயணிகளுக்கு தொந்தரவாக செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நீண்டதூரம் ரயிலில்பயணம் செய்யும் பலர், செல்போன், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களைக்கொண்டு தங்களது நேரத்தை கழித்துவருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இரவு நேர பயணத்தின்போது அரங்கேறி வருகிறது. இதனால், சக பயணிகள், மூதியோர்களின் தூக்கம் கெடுகிறது. இதுதொடர்பாக ரயில்வேக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. இதைடுத்து, புதிய விதிமுறைகளை இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

குறிப்பாக முதியோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்படாதவாறும், இரவு நேர பயணத்தின்போது மற்ற பயணிகளுக்கு இடையூற ஏற்படாதவாகு சிறப்பான சேவைகளை வழங்க ரயில்வே நிர்வாகம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் ரயில் பணிகள் பெட்டிகளுக்குள் சத்தமாக போன் பேசுவது, செல்போனில் சத்தமாக பாடல் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

இரவு விளக்கு வெளிச்சத்தை தவிர மற்ற விளக்குகள் மற்றும் செல்போன் வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கக் கூடாது.

இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது. மீ

றி செயல்பட்டு அது தொடர்பான புகார் ரயில்வே நிர்வாகத்திற்கு வந்தால், அந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல், ரயில்வேயில் பணிபுரியும் சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மின்சாதன பராமரிப்பாளர்கள், உணவு பிரிவு ஊழியர்கள், இன்னும் பிற சேவை மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் சத்தமின்றி பயணிகளுக்கு தொந்தரவு தராமல் வேலை செய்வார்கள்.

இரவு நேரங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு தேவையான சில உதவிகளை செய்ய ரயில்வே ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.

இந்த விதிகளை அனைத்து மண்டலங்களும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், பயணிகள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.