வாரனாசி:
மேக் இன் இந்தியா திட்ட தொழில்நட்பத்தின் கீழ் வாரனாசியில் ஒரு டீசல் ரெயில் என்ஜின் மின்சார என்ஜினாக மாற்றி சாதனை படைத்துள்ளது.
ரெயில்வே மின்மயாக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு ஏற்ப டீசன் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார ரெயில் என்ஜின்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. புதிதாக மின்சார ரெயில் என்ஜிகள் தயாரிக்க கூடுதல் செலவாகும்.
அதனால் பழைய டீசல் என்ஜின்களை மின்சார ரெயில் என்ஜினாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வகையில் வாரனாசி இந்தியன் ரெயில்வே என்ஜின் உற்பத்தி பணிமனை இதற்கான பணி தொடங்கப்பட்டு வெற்றி கரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பணிமனையின் செய்தி தொடர்பாளர் நிதின் மெஹரோத்தா கூறுகையில், உலகிலேயே முதன் முறையாக டீசன் ரெயில் என்ஜின் மின்சார ரெயின் என்ஜினாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தொடங்கியது.
பிப்ரவரி 28ம் தேதி முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் கூடுதல் மேம்பாடு குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. 12 சக்கரங்களுடன் 10 ஆயிரம் குதிரை திறன் கொண்ட மின்சார ரெயில் என்ஜினாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.