டில்லி
இந்திய ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்கி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாள் தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரணத்துக்காக பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் இந்திய ரயில்வே ஊழியர்கள் 13 லட்சம் பேர் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக அளிக்க முன் வந்துள்ளனர்.
ரயில்வே ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் சுமார் ரூ. 151 கோடி ஆகும்.
இந்த தொகையை அவர்கள் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு கொரோனாவை எதிர்த்துப் போராட வழங்கி உள்ளனர்.
[youtube-feed feed=1]