டெல்லி

ந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. புல்லட் ரயிலுக்கான திட்டம் கடந்த 2017 ஆம் வருடம் தொடங்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு இந்த திட்டத்தை நிறைவு செய்து, புல்லட் ரயிலை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது.

ஆயினு, நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்கள் மற் றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக புல்லட் ரயில் திட்டப் பணிகள் தாமதமாகின.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர், புல்லட் ரயில் திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு,

“அனைத்துப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகளும் இன்னும் வழங்கப்படவில்லை என்பதால், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் நிறைவடையும் தேதியை முடிவு செய்ய இயலவில்லை” 

என இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது.