பயல் மோடி..

தண்ணீர் துப்பாக்கி மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வது போல கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட இந்திய ஆசிரியர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், தல்லாஸ் நகரில் இயங்கும் ஆடம்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்  பயல் மோடி என்பவர்.  இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

கடந்த 20-ந்தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற போது, எட்டு விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவைஇன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பயல் மோடி பதிவிட்டார்.

அந்த வீடியோவில், அதிபர் டிரம்ப் புகைப்படத்தின் மீது, தண்ணீர் துப்பாக்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பயல் மோடி, “டிரம்ப்பை கொன்றுவிட்டேன்” என்று உற்சாகமாக கூவுகிறார். இந்த  வீடியோ வைரலாகியது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை லைக் செய்தனர்.

இந்த நிலையில்,தல்லாஸ் மாவட்ட பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஆசிரியர் பயல் மோடியை சஸ்பெண்ட் செய்தது.

வீடியோவில்..

 

இது குறித்து தல்லாஸ் மாவட்ட பள்ளி நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் ராபின் ஹாரிஸ் பேசுகையில், “ ஆசிரியர் பயல் மோடியிடம் முறையாக விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது.  அவர்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது விடுப்பில் சென்றுள்ளார். திரும்ப வந்தததும் விசாரணை தொடரும்” என்றார்.

“ஆசிரியர் பயல் மோடியின் செயல்பாடு தவறு” என்றும், “இதில் பெரிய தவறொன்றும் இல்லை. நகைச்சுவையாகவே அவர் செய்தார்” என்றும் இருவேறு கருத்துக்கள் அமெரிக்கர்களிடையே நிலவுகிறது.