வாஷிங்டன்

மெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கடந்த சில நாட்களாக இந்தியா முதல் இடத்தில் உள்ளது.   இதற்கு முன்பு இதே இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது.  தற்போது இந்தியாவில் ஆஸ்டிரா ஜெனிகா மற்றும் பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   விரைவில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி போடப்பட உள்ளது..

அமெரிக்காவில் தற்போது ஆஸ்டிரா ஜெனிகா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த மருந்துகள் அங்கு ஏராளமான அளவில் பயன்படுத்தாமல் உள்ளன.   அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் கிடைக்காமல் உள்ளன.   இந்நிலையில் வரும் மே மாதம் முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி டாக்டர் ஆசிஷ் கே ஜா தனது டிவிட்டரில்,

“இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு வேகம் பயங்கரமாக உள்ளது.

பயங்கரம்

அங்கு அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி போட மிகவும் சிரமமான நிலை உள்ளது.

ஆனால் அமெரிக்க மக்கள் ஒரு போதும் பயன்படுத்தாத ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிகள் 3.5 முதல் 4 கோடி டோஸ்கள் இங்கு வீணாக உள்ளது.

தயவு செய்து அவற்றை இந்தியாவுக்கு இலவசமாகவோ அல்லது கடனாகவோ கொடுக்கலாமே

இது அவர்களுக்கு மிகவும் உதவும்”

எனப் பதிந்துள்ளார்.