இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வர்ணனைக்கு அங்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பெண்கள் கலந்துகொண்டு வருவது அதிகரித்து உள்ளது. தற்போது 8 பெண்கள் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார்கள். இதுபோக முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக களமிறங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவை பூர்விகமாக கொண்ட கஸ்தூரி நாயுடு என்பவர் இருந்து வருகிறார். இவர்தான் தென்னாப்பிரிக்காவின் முதல் பெண் வர்ணனையாளர் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் ஆந்திராவில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்று அங்கு ட்ர்பனில் வசித்து வருகிறார்கள். இதுகுறித்து கூறியுள்ள கஸ்தூரி நாயுடு,
தான் 14 வயதில் கிரிக்கெட் போட்டியை கான சென்றபோது, அங்கு கிரிக்கெட் வர்ணனை செய்வதை பார்த்ததாகவும், அதன் காரணமாக தானும் அதுபோல வர்ணனையாளராக ஆக வேண்டும் என்ற ஆசை உருவானது என்று கூறி உள்ளார்.
மேலும், இந்த ஆசையின் காரணமாக பள்ளி முடிந்ததும், விளையாட்டு மைதானத்துக்கு சென்று, அவர்களின் வர்ணனையை கவனிக்க தொடங்கியதாகவும் அதில் ஏற்பட்ட அதீக ஆர்வம் காரணமாக, எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு செல்லத் தொடங்கினேன் என்றும் கூறி உள்ளார்.
இதன் காரணமாக எனக்கும் அவர்களை போலவே வர்ணனை செய்ய ஆசை மேலோங்கியது. இதுகுறித்து எனது அம்மாவிடம் கூறினேன் என்றும், தற்போது தனது கனவை நினைவாகி உள்ளது என்று பெருமையுடன் கூறிய கஸ்தூரி, தன்னை தென்னாப்பிரிகா ரசிகர்கள் கஸ் நாயுடு என்று அன்போடு அழைப்பதாகவும், தானே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் பெண் வர்ணனையாளராக ஆகியிருக்கிறேன்’ என்றார்.
கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்தான் முதன்முறையாக அறிமுகமானதாக கூறும் கஸ்தூரிக்கு 8 வயதில் மகன் உள்ளார்.
இவர்து நிண்ட நாளைய ஆசை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்திக்க வேண்டும் என்பதே.. அவரது ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் நம்புவோம்.