வாஷிங்டன்

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் உள்ளிட்ட 10 பேர் நாசா விண்வெளிப் பயணத்திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஆகும்.  இந்த நிறுவனம் நிலவு, செவ்வாய்க் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.   இந்த திட்டத்துக்காக விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன.

இதற்காக சுமார் 12000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.  அந்த விண்ணப்பதாரர்களில் இருந்து 4 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான அனில் மேனனும் ஒருவர் ஆவார்.

அனில் மேனன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.  தற்போது  அமெரிக்க விமானப்படையில் லெஃப்டினண்ட் கர்னலாக பணிபுரியும் இவர் நாசாவின் முந்தைய விண்வெளி ஆய்வுகளிலும் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார்.