வாஷிங்டன்,
அமெரிக்காவில் இந்திய வம்சாவழி இளம்பெண் ஒருவர் கொள்ளை முயற்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.. அவருடன் இருந்த அவரது உறவினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்கா நாட்டின் சிகாகோவில் உள்ள டால்டன் பெட்ரோல் நிலையத்தில் இருந்தபோது, கொள்ளையர்கள் அந்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்து பர்சை பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது கொள்ளையனுக்கும், இந்த இளம்பெண்ணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து கொள்ளையன் அந்த இளம்பெண்ணை தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.
இந்த கொள்ளை முயற்சியில் அந்த இளம்பெண் பலியானார். அவரது உறவினரான 55வயதான நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரைணை மேற்கொண்டனர். விசாரணையில் துப்பாக்கி சூட்டில் பலியான பெண் பெயர் அர்ஷத் வோரா (வயது 19) என்றும் அவர் இந்திய வம்ச வழியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்ததுள்ளது.