புதுடெல்லி: இந்தியாவில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியின் சராசரி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள நாடுகளைவிட குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல், ஐ.நா. அமைப்பின் தொழிலாளர் பிரிவு ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா காலத்திய முடக்கத்தில், முதல் இரண்டு கட்டங்களின்போது, இந்திய முறைசாரா தொழிலாளர்கள், தங்கள் ஊதியத்தில் 22.6% ஐ இழந்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அதிகமுள்ள முறைசார் தொழில்துறையில் 3.6% அளவிற்கு ஊதிய குறைப்பு நிகழ்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச மாத ஊதியத்திற்கான உலகளாவிய சராசரி ரூ.9720 ஆக உள்ளது. ஆனால், இந்தத் தொகை இந்தியாவில் ரூ.4300 என்பதாக உள்ளது.
ஆனால், பாகிஸ்தானில் இந்தத் தொகை ரூ.9820 என்பதாக உள்ளது. அதாவது, உலக சராசரியைவிட அதிகம். நேபாளத்திலோ ரூ.7920 என்பதாக உள்ளது. இலங்கையில் அத்தொகை ரூ.4940 என்பதாகவும், சீனாவில் ரூ.7060 என்பதாகவும் உள்ளது.