லண்டன்: சாதி அடிப்படையில் இயங்குவதாக கூறி பிரபல திருமண இணையதளமான ஷாதி.டாட் காம் மீது புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளம் ஷாதிடாட் காம் ஆகும். பல மதம், இனம், சாதி கொண்டவர்கள் தமது இணையை தேடும் தளமாக இது அமைந்திருக்கிறது.
ஆனால், இப்போது சாதி பாகுபாடு பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டுக்கு இலக்காகி இருக்கிறது. இந்திய சமூகத்தை பராமரிக்கும் இங்கிலாந்தின் மிகப்பெரிய திருமண தளமாக விளங்கும் இந்த வலைத்தளம், பட்டியல் சாதி சமூகத்திற்கு எதிராக பாகுபாடு காட்ட அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உயர் சாதியினருக்காக அமைக்கப்பட்ட சுயவிவரத்தில் மற்ற சாதியினரையும் சேர்க்க வாய்ப்புகள் வழங்கவில்லை. இதையடுத்து இங்கிலாந்தின் சமத்துவ சட்டத்தை மீறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சாதிகள் சமத்துவச் சட்டத்திற்கு முரணானது. பயனர்கள் தங்கள் சாதியைக் கூறும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், தளங்கள் தங்களை பாகுபாடு காட்டுகின்றன அல்லது பயனர்களால் பாகுபாடுகளுக்குத் தெரிந்தே உதவுகின்றன என்று சாதி-பாகுபாடு எதிர்ப்பு கூட்டணியின் சந்தோஷ் தாஸ் கூறி இருக்கிறார்.
சாதி அடிப்படையில் சில பயனர்களைப் பிரிக்கவும், சாதகமாக்கவும் வழிமுறைகளை பயன்படுத்கிறீர்கள். இது அதிர்ச்சியை தருகிறது என்று கூறியிருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஷாதி டாட் காம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறைக்கும், பாகுபடுத்தும் எண்ணம் இல்லை. பாகுபாடு காட்டாததால், எந்தவொரு இனத்தையும் சமூகத்தையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.