9 மாதக் குழந்தையாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பெற்றோருடன் சென்ற நிலையில் தற்போது 64 வயதில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் “சுபு” வேதம், தான் செய்யாத கொலை குற்றத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க சிறையில் இருந்தார்.

புலனாய்வாளர்கள் அவரை விடுவிக்கக்கூடிய முக்கிய FBI அறிக்கைகளை மறைத்து வைத்திருந்ததாக கிடைத்த புதிய சான்றுகளை அடுத்து அவர்மீதான கொலை குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இருந்தபோதும் அவரது விடுதலைக்காக போராடி வந்த அவரது பெற்றோர் தங்களது மகனின் விடுதலையைப் பார்ப்பதற்கு முன்பே இறந்துவிட்டனர்.

அதேவேளையில், 43 ஆண்டுகள் சிறையில் இருந்த ‘சுபு’ விடுவிக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் அவரை நாடு கடுத்துவதற்காக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனர்.

கொலை குற்ற தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், 1980களில் அவரை நாடு கடத்த வழங்கப்பட்ட உத்தரவு இன்னும் செயலில் இருப்பதாக ICE அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடுத்தினர் மற்றும் உடன் பிறந்தவர்கள், குழந்தைப் பருவம் தொடங்கி கிட்டத்தட்ட முழு வாழ்க்கையையும் அமெரிக்காவில் கழித்த ஒருவருக்கு இந்தியா “முற்றிலும் மாறுபட்ட உலகம்” என்று வேதனையுடன் மீண்டும் தங்களது சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.