நியூயார்க்,
அமெரிக்காவில் உள்ள ஒயிட்ஹவன் நகரில் உள்ள மோட்டலில் இந்தியாவை சேர்ந்த காண்டு படேல் (வயது 56) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 8 மாதங்களாக 2 குழந்தைகளுடன் அமெரிகாவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காண்டு படேல் மோட்டல் வெளியில் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டலில் இரு தரப்புக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவர் துப்பாக்கி எடுத்து சரமாறியாக சுட்டார். அதில் ஒரு குண்டு காண்டு படேல் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்தியர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இது அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]