டோக்கியோ

லிம்பிக் போட்டியில் ஈட்டி  எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.    இந்த போட்டிகளில் இந்திய தங்கப்பதக்கம் வெல்லும் என எதிர்பார்ப்பு உள்ள போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியும் ஒன்றாகும்.

இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் இந்திய ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ரா ஆவார்.  இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறியும் தகுதிச் சுற்றுப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

அவர் தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.  இதையொட்டி அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.  வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் அவர் கலந்து கொள்கிறார்.

இதற்கு முன்பு நீரஜ் சோப்ரா உலக ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்ட போது 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.  இது உலக சாதனை ஆகும்.  அப்போது அவர் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.