இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் போட்டியுடன் தான் ஓய்வு பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஸ்பெயின் இடையே இன்று நடைபெறும் ஆட்டம் வெண்கலப் பதக்கம் வெல்லும் அணி யார் என்று தீர்மானிக்கும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/16Sreejesh/status/1821453316678647984

36 வயதான ஸ்ரீஜேஷ் உலகளவில் சிறந்த ஹாக்கி கோல் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு இந்திய ஹாக்கி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.