கொழும்பு: இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்கே தெரிவித்துள்ளார்.

மேலும், “இலங்கையில் இனி போருக்கான சூழல் ஒருபோதும் உருவாகாது என நாங்கள் உறுதியளிப்பதாக கூறிய அதிபர்,  இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கானது  இங்குள்ள தமிழர்களிடம் இருந்த பறிக்கப்பட்ட நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் என்றும் அதிபர் உறுதி அளித்தார்.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வரும் (நவம்பர்) 14-ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இறுதிக்கட்ட பிரசாரம் ஆடுபிடித்து உள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் ஜஃப்னா (தமிழர்கள் வசிக்கும் பகுதி)  பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக  பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகா , தமிழர்களுக்கான  பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.  செயல்பாடின்றி இருக்கும் மாகாண மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமென  குறிப்பிட்டார். . “குறிப்பிட்ட பகுதிகளில் மக்களால் தேந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அவர்களை வழிநடத்துவார்கள்“ என  தெரிவித்ததுடன்,

“ஜஃப்னாவில் நாங்கள் 27 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றோம். எங்கள் திட்டங்கள் குறித்து தமிழர்களிடம் சரியாக விளக்கம் அளிக்காததே இதற்கு காரணம் என கூறியவர்,  தெற்கில் சிங்களர்கள் வசிக்கும் பகுதியில் நாங்கள் பணியாற்றியதை போன்று, இங்கு நாங்கள் செயலாற்றவில்லை. அந்த சூழல் தற்போது சீரமைக்கப்பட்டது“ என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

“இங்கு அதிகளவிலான மக்கள் கூடியிருப்பது, நீங்கள் அரசு மீது நம்பிக்கை கொண்டுள்ளதை காண்பிக்கிறது. இனம் மற்றும் மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான தேசத்தை உருவாக்குவேன். சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு கடந்த கால அரசியல்வாதிகள் தான் காரணம். நம் நாட்டில் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜஃப்னா பகுதி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்“ என  கூறியவர்,  சுமார் 30 ஆண்டு கால போர், இலங்கையில் கண்ணீர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் இழப்புகளையே விட்டுச் சென்றதாக  வருத்தமுடன் தெரிவித்தார்.

இலங்கைடியல் . “இனி போருக்கான சூழல் ஒருபோதும் உருவாகாது என நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கானது என நம்பிக்கையை உருவாக்குவதற்கு கடினமாக உழைக்கும்“ என உறுதி அளித்தார்.

நாட்டில், அதிகரித்து வரும்,  வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம்   கவலை அளிப்பதாகக் கூறிய அதிபர், இளைஞர்களின் எதிர்காலத்திற்காக இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், போதைப்பொருள்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுமெனவும்  கூறியவர்,   விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு துணை நிற்கும்  ஏனுறமு,  . “இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அனுமதிக்க மாட்டோம். இதனால், இலங்கையின் கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது“  என்றும்  அநுர குமார திசாநாயகே தெரிவித்தார்.