டெல்லி:

ந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இக்கட்டான சூழ்நிலையில், இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளது மோடி அரசு. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவைப்போலவே இலங்கையிலும்  கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை, 263 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், 186 பேர் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுஉள்ளது. அதுபோல 6 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொற்றில் இருந்து 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் சுமார் 2,000 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்பு உள்ள நிலையில், நாடு முழு வதும் ஊரடங்கை  அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கைப் பின்பற்றி, அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும்’ என, இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும்வகையில், உயிர் காக்கும் மருந்துகளை வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை வெண்டுகோள் விடுத்திரந்தது. அதை ஏற்று, இலங்கைக்கு இந்தியா 10 டன் எடையுள்ள உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.

இந்த மருந்துகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று(செவ்வாய்க்கிழமை) கொழும்பு விமான நிலையத்தில் தரை இறங்கியது.

இதுகுறித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த நெருக்கடி மிகுந்த சூழலில், இலங்கை மக்களைக் காப்பதற்காக, மருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவி, இலங்கைக்கு துணை நிற்கும் இந்தியாவின் மற்றொரு செயல்பாடு இதுவாகும்.

உள்நாட்டிலேயே இந்தியா சவால்களை சந்தித்துவரும் நிலையில், தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் மனிதாபிமான  நடவடிக்கைக்கு, உலக சுகாதார நிறுவனம் உள்பட உலக நாடுகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.