டில்லி
ட்விட்டரில் ஒருவர் கேலியாக கேட்ட கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் இந்திய தூதரகம் உதவும் என கிண்டலாக பதில் பதிவு செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் பலர் உதவி கேட்டு வருகின்றனர்.
அதை உடனுக்குடன் பார்வையிட்டு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்து வருகிறார் சுஷ்மா.
இந்நிலையில் நேற்று கரண் சைனி என்னும் நபர் கிண்டலாக ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
அதில் தான் செவ்வாய் கிரகத்தில் சிக்கியுள்ளதாகவும், 987 நாட்களுக்கு முன் மங்கள்யாண் மூலம் அனுப்பி வைத்த உணவு தீர்ந்து விட்டதாகவும், மங்கள்யாண்-2 எப்போது அனுப்ப படும் என கேட்டுள்ளார்.
இதற்கு சுஷ்மாவும் சளைக்காமல் அவர் பாணியிலேயே செவ்வாய் கிரகத்தில் சிக்கியவர்களுக்கும் இந்திய தூதரகம் உதவி செய்யும் என மேலும் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அமைச்சரின் பதிலை இதுவரை சுமார் 3500க்கும் மேற்பட்டோர் ரிட்வீட் செய்து இருக்கிறார்கள்.
கரண் பதிவுக்கு எதிரான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
நல்ல காரியம் செய்யும் அமைச்சரை கிண்டல் செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது என பலரும் பதில் அளித்துள்ளனர்