மே 17 முதல் மீண்டும் உக்ரைனில் இந்தியத் தூதரகம்

Must read

டில்லி

ரும் மே 17 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டில் மீண்டும் இந்தியத் தூதரகம் செயல்பட உள்ளது.

பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனில் அதிகமான போது, உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு அங்கிருந்து வெளியேற்றி தாய் நாடு அழைத்து வந்தது.

பெரும்பாலான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு வெளியேறிய பின்னர், கடந்த மார்ச் 13-ம் தேதி அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் வார்சாவிற்கு மாற்றப்பட்டது.  தற்போது வரை உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வார்சாவில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வார்சாவில் (போலந்து) இருந்து தற்காலிகமாக இயங்கி வந்த உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம், மே 17ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து செயல்படத் தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article