கிவ்

க்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது

 

ரஷ்ய ராணுவப்படையினரால் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து 7 ஆம் நாளாகப் போர் நடந்து வருகிறது.  உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் ரஷ்யப்படையினரால் தாக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் நவீன பரிதாபமாக உயிரிழந்தார்.  ரஷ்ய படைகள் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இதையொட்டி உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரக வெளியிட்டுள்ள அறிவிப்பில்.

”கார்கிவ் நகரில் உள்ள அனைத்து இந்தியக் குடிமகளுக்கும் ஒரு அவசர அறிவுறுத்தல்

தற்போது கார்கிவ் நகரில் உள்ள நிலைமையை முன்னிட்டு இந்தியர்கள் உடனடியாக மீண்டும் தெரிவிக்கிறோம் உடனடியாக கார்கிவ் நக்ரில் இருந்து அவரவர் சொந்த நலன் மற்றும் பாதுகாப்புக்காக வெளியேற வேண்டும்.  அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெசோசின், பாபாயே மற்றும் பெச்லியுடோவ்கா பகுதிக்குத் தப்பிச் செல்ல வேண்டும்.

அவர்கள் இந்த இடங்களுக்கு உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் எந்த வகையிலாவது பயணித்துப் போய்ச் சேர வேண்டும்”

என அறிவுறுத்தப்பட்டுள்ளது.