ஒரு காரின் மூன்று டயர்களும் பஞ்சர் ஆன நிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருக்கிறது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியபோது, “தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசு செலவினங்கள் தான் பொருளாதார வளர்ச்சிக்கான நான்கு முக்கிய அம்சங்களாகும்.

இந்த நான்கும் ஒரு காரின் டயர் போன்றது என விளக்கிய சிதம்பரம், தற்போது அதன் மூன்று டயர்களும் பஞ்சரான நிலையில் அப்படியே நின்று விட்டது” என்று தெரிவித்தார்.

மேலும், “ அரசு செலவினங்கள் என்ற ஒற்றை சக்கரத்தில் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம் சென்றுக் கொண்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமான்ய மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்” என்றார்.