இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தந்தையானார். இவரது மனைவி சஞ்சனா கணேசனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பும்ரா மற்றும் சஞ்சனா 2021 இல் திருமணம் செய்து கொண்டனர் ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் விளையாட்டு தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை மார்ச் 2021 இல் திருமணம் செய்து கொண்டார்.

தான் தந்தையானதை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜஸ்பிரீத் பும்ரா “”எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது, நாங்கள் நினைத்ததை விட எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் குட்டி மகன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டிகளை முடித்துக் கொண்டு தற்போது மும்பையில் உள்ள பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்காக மீண்டும் இலங்கை செல்லவுள்ளார்.