அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது.

எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து நடக்கவில்லை, அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்றமே நேரடியாக உத்தரவை நிறைவேற்ற இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது.
கடந்த வருடம் டிசம்பரில் உத்தர பிரதேச அரசுக்கு எதிராக இப்பிரிவை சுப்ரீம் கோர்ட்டின், நீதிபதி ராஜன் கோகாய் தலைமையிலான அமர்வு பயன்படுத்தியது.
லோக்ஆயுக்தா நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசு சுப்ரீம்கோர்ட் உத்தரவை கண்டுகொள்ளாத நிலையில், சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக முன்னாள் நீதிபதி விரேந்திரசிங்கை உத்தரபிரதேச லோக்ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தது.
நேற்று நடைபெற்ற காவிரி மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இப்பிரிவை பயன்படுத்தி கர்நாடக அணைக்கட்டுகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க தமிழகம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபை தீர்மானம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி கூறியதாவது:

இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி எண்.144-ன் கீழ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நிதிபதி கங்குலி.
இதன்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்ட விதிகளை மீறும் செயலாகும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. தீர்ப்பை கர்நாடக அரசு ஆய்வு செய்யவும் முடியாது.
அரசாங்கமே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்றாவிட்டால் நாட்டில் அது மிகவும் மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றார்.
Patrikai.com official YouTube Channel