Project Cheetah மூலம் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தைக்கு பிறந்தது முஃஹி.

2023ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த முஃஹி என்று பெயரிடப்பட்ட இந்த சிறுத்தையுடன் பிறந்த மற்ற மூன்று குட்டிகள் பிறந்த சில நாட்களில் இறந்து போயின.

இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்ட முஃஹி முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் ஐந்து குட்டிகளை ஈன்றது.

இதையடுத்து இந்த சிறுத்தைகளை இந்தியாவில் பிறந்த இரண்டாம் தலைமுறை சிறுத்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை 32ஆகவும் குனோ பூங்காவில் மட்டும் 29ஆகவும் உயர்ந்துள்ளது.