டில்லி:

இந்திய கோடீஸ்வரர்களின் (பில்லியனர்ஸ்) சொத்து மதிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘ 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 15 சதவீதமாக உள்ளது. இதனால் ஏழை மேலும் ஏழை ஆகும் நிலை உள்ளது. 5 ஆண்டுகளில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

2017ம் ஆண்டில் 101க்கும் அதிகமானோர் நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ள கோடீஸ்வரர்களாக (பில்லியனர்ஸ்) உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு ஒரு சதவீதம் அதாவது ரூ.20.9 டிரில்லியன் அதிகரித்துள்ளது. ஆனால், 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பும் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.