ஜம்மு:

தொடர்ந்து இந்தியாவை சீண்டி வரும் பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டின் மீது இந்தியப்படை தாக்குதலை துவங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை சிதைத்து வீசியது பாகிஸ்தான் ராணுவம். இதனால் எல்லைப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக்கட்டுப்பாட்டு  பகுதி அருகே பாகிஸ்தான் நோக்கி இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல்களைத் துவக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த வருடத்தில் மட்டும் 153 முறை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம்   மீறியுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]