டெல்லி: எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
அண்மையில் இந்தியா, சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் பலர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் இருந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இந்தியா-சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளவும் தயார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
எல்லை ஊடுருவலை எதிர்கொள்ள நீண்ட கால அடிப்படையில் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் ராவத் தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியில் 5 முறையும், தூதரக ரீதியில் 3 முறையும் பேச்சு நடைபெற்றது. ஆனாலும், இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.