நியூயார்க்:

இந்திய வம்சாவளியை சேர்ந்த  தீபா அம்பேகர் என்ற 41 வயது பெண்மணி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரை  நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியிமித்து,  நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ அறிவித்து உள்ளார். இவர் நியூயார்க் சிவில் கோர்ட்டில், கிரிமினல் வழக்குகளை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் தீபா அம்பேகர்,  மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். மேலும்  ரூட்கர்ஸ் சட்டப்பள்ளியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

இவர்   ஏற்கனவே நியூயார்க் நகர கவுன்சிலில் 3 ஆண்டு காலம் பணி ஆற்றி உள்ளார்.  அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்புக்கான குழுவின் வழக்கறிஞராகவும், சட்ட உதவி சங்கத்தின்  வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் தீபா அம்பேகரை நியூயார்க் சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் நகரில் ஏற்கனவே சென்னையை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.