கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக நடிகை மிஷ்டி முகர்ஜி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (02.10.20) அன்று மிஷ்டி முகர்ஜி மரணமடைந்தார். அவருக்கு வயது 27.
இந்நிலையில் கீட்டோ டயட் முறையை தொடர்ந்து பின்பற்றியதாலேயே மிஷ்டி முகர்ஜிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர் .
‘காஞ்சி: அன்ப்ரேக்கபிள்’, ‘கிரேட் க்ராண்ட் மஸ்தி’, ‘பேகம் ஜான்’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களில் மிஷ்டி முகர்ஜி நடித்துள்ளார்.
உணவில் மிக மிகக் குறைந்த அளவில் மாவுச்சத்தை எடுத்துக்கொண்டு அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் எடுத்துக்கொள்வதுதான் கீட்டோ டயட்.