கொல்கத்தா

னது முதல்  பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் தோற்கடித்து 2 : 0 என்னும் விகிதத்தில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி இந்தியாவுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டியிட்டது.  இதில் இந்தூரில் முதல் டெஸ்ட் பந்தயம் நடந்தது.  அதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்களில் வெற்றி பெற்றது.   இரண்டாம் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.   இது இந்தியா பங்கு கொள்ளும் முதல் பகல் இரவு போட்டியாகும்.

இந்த போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்கள் எடுத்தது. அதே வேளையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது. அதன் பின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 89 ரன்கள் பின் தங்கியிருந்தது. வங்கதேச வீரர் முஸ்பிகுர் (59) அவுட்டாகாமல் இருந்தார்.

மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்தது.    இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணியில் எபாடத் தை ரன் எடுக்காமல் உமேஷ் யாதவ அவுட் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து எதிர்முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஸ்பிகுர் 74 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

நேற்று ரன் எடுக்க ஓடிய போது காலில் காயமடைந்த வங்கதேச வீரர் மகமதுல்லா இன்று பேட்டிங் செய்ய வரவில்லை.  வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சோதனை தொடரை 2 : 0 என்ற விகிதத்தில் கைப்பற்றி உள்ளது.